தங்களின் வருகை
 

சுன்னத்-வல்-ஜமாஅத் இஸ்லாமிய பேரவை, ஃப்ரான்ஸ்

 

அல்குர்ஆன் வசனம்


முஸ்லிமின் உயர்ந்த பண்பு

السلام عليكم
 ورحمة اللهِ وبركات

ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.

 

1.      நீஅவனைச் சந்திக்கும்போது ஸலாம் சொல்வது.

2.      அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)

3.      அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது

4.      அவன் தும்மி ''அல்ஹம்துலில்லாஹ்'' என்றுகூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ்என்று) பதிலளிப்பது.

5.      அவன்நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது.

6.      அவன்மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வளமுடன் வாழ

ஒரு நாள் இரவில் நீங்கள் சற்று அதிகமாக சாப்பிட்டு நித்திரை செய்து விட்டீர்கள். அன்றைய இரவு வணக்கங்களில் ஈடுபடாமல் நான் உங்களை தடுத்துவிட்டேன் என பெருமிதத்துடன் கூறியதை கேட்ட யஹ்யா (அலை) அவர்கள் இனிமேல் நான் அதிகம் சாப்பிட மாட்டேன் எனக் கூறினார்கள். இதைக் கேட்ட ஷைத்தானோ இனிமேல் நான் எந்த இரகசியத்தையும் வெளியிட மாட்டேன் எனக் கூறி அவ்விடத்தை விட்டும் விரண்டோடினான்.

நபிகள்பெருமானார்!

எம்மனிதன் பிழைசெயினும் மன்னித்து விடுங்கள்,
எழுப்புகிற பொல்லாத சினத்தையடக் குங்கள்
,
நம் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்கள் முற்றும்
,
நல்லதென மிகமதித்து நித்தமும் நில் லுங்கள்!
சம்மதமாய் நல்மார்க்கம் ஒப்பாத வற்றைத்
தவிருங்கள்
, தற்பெருமை, அழுக்காறு, சூழ்ச்சி,
செம்மையிலா உரையாடல், வீண் வேலை, அநீதி
தேவையிலை இவையெலாம்
,
ஒதுக்குங்கள் என்றார்!
 

அல்ஹதீத்

அல்குர்ஆனை மட்டும் பின்பற்றி நடப்ப தென்றால் கூட அதற்கும் அல்ஹதீத் அவசியம.; ஏனெனில் முதஷாபிஹாத் என்ற ஆழமான, அரபுக் கவிஞர்களால் கூட விளங்க முடியாத வசனங்கள் பல உண்டு அவைகளுக்கு மிகத் தெளிவான விளக்கம் அண்ணல் நபியின் அமுத மொழிகளால் மட்டும் தான் உண்டு. அதுமட்டும் அன்றி அருள்மறை ஒரு விஷயத்தை பொதுவாகத்தான் கூறும். உதாரணமாக اقيموا الصلاة தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று தான் கூறுகிறது. எப்பொழுது தொழ வேண்டும், எப்படி தொழ வேண்டும் என்பதை தெளிவு படுத்துவது ஹதீததான்.

அல்குர்ஆன்

அல்குர்ஆன்

அகில உலகத்தையும் அற வழியில் செலுத்துவதற்காக அழகு மொழியாம் அரபியிலே இலக்கண நயத்துடன், இலக் கிய வளத்துடன், ஆழிய கருத்துக்களுடன் கூடிய அழகிய நடையிலே அனைத்தையும் பொதிந்த பெட்டகமாக அண்ணல் நபிகளார் மீது அல்லாஹ்வால் அருளப்பட்ட அருள்மறைதான் "அல் குர்ஆன்"


  Top